அருந்ததி வசிஷ்டாப்யாம் நமஹஅருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் கைத்தறிநகர்சனி மஹாபிரதோஷம் - 21.03-2020 பங்குனி- 8 சனிக்கிழமைநமது திருக்கோவிலில் அருணாச்சலேஸ்வரருக்கும் நந்தியம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரங்களும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.மேலும் ருத்ர சமக பாராயணம், அஷ்டோத்ர சத நாமாவளி அர்ச்சனை,திருவாசக பாராயணம் நடைபெறும்.ஸ்வாமி புறப்பாடு உண்டு பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருணாசலேஸ்வரரின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். நேரம் மாலை 4.00 to 6.00
Posts
Showing posts from March, 2020
- Get link
- X
- Other Apps
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய் பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்
- Get link
- X
- Other Apps
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய் ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்
- Get link
- X
- Other Apps
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளி கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய் மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித் தாட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்